Trending News

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தயார்-அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

(UTV|COLOMBO)-சிங்கப்பூர் – இலங்கை வர்த்தக ஒப்பந்தத்தை இரத்துச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தயார் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அந்த சங்கத்தின் செயலாளர் ஹரித அளுத்கே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இந்த ஒப்பந்தத்திற்கு  உரிய முறைமையில் அமைச்சரவை அனுமதி பெற்றுக்கொள்ளப்படவில்லை.

இந்த ஒப்பந்தம் குறித்து, தமது மத்திய குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட மத்திய குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக ஹரித அளுத்கே குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

 

Related posts

India eases travel advisory to Sri Lanka

Mohamed Dilsad

Nissanka Senadhipathi remanded

Mohamed Dilsad

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கைது

Mohamed Dilsad

Leave a Comment