Trending News

சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் கீழ் பதிவு செய்ய தீர்மானம்

(UTV|COLOMBO)-பாடசாலை போக்குவரத்து சேவைகள் மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலையங்களை சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் கீழ் பதிவு செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்நேய மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவையாக இவை முன்னெடுக்கப்படுகின்றதா என்பது தொடர்பில் நேரடி கண்காணிப்புக்களை மேற்கொள்வதற்காகவே இந்தத் திட்டத்தின் நோக்கம் என, சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் எச்.எம். அபேரத்ன தெரிவித்துள்ளார்.

குறிப்பாக சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் சேவையாற்றுபவர்களின் கல்வி தகைமை மற்றும் மனநிலை தொடர்பிலும் மதிப்பீடு செய்யப்படவுள்ளது.

சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் சிறுவர்கள் பல்வேறு வன்முறைகள் மற்றும் பாதுகாப்பற்ற நிலைமைகளுக்கு உள்ளாகுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

Representatives of US Congress called on President

Mohamed Dilsad

அம்பாறையில் சுமூக நிலை

Mohamed Dilsad

மாணவிகள் தலை மூடகூடாது – அதுரலியே ரதன தேரர்

Mohamed Dilsad

Leave a Comment