Trending News

ஓர் ஓவரில் 6 சிக்சர்களை விளாசிய இளம் வீரர்

(UTV\AUSTRALIA)-அவுஸ்திரேலியாவின் இளம் வீரரான ஒலிவர் டேவிஸ் (Oliver Davies) அவுஸ்திரேலிய 19 வயதுக்குட்பட்ட தேசிய சம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில், ஓர் ஓவரில் 6 சிக்சர்களை விளாசியுள்ளார்.

போட்டியில் அவர் 115 பந்துகளில் 207 ஓட்டங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

19 வயதுக்குட்பட்ட ஒருநாள் கிரிக்கெட் சம்பியன்ஷிப் தொடரில் வீரரொருவர் இரட்டைச் சதம் விளாசிய முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

போட்டியில் 40 ஆவது ஓவரின் 6 பந்துகளையும் ஒலிவர் டேவிஸ் சிக்சர்களாக மாற்றினார்.

அவர் 100 ஓட்டங்களை கடந்ததன் பின்னர் அடுத்த சதத்தை 39 பந்துகளில் விளாசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலிய 19 வயதுக்குட்பட்ட தேசிய சம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில் ஒலிவர் டேவிஸ், நியூசவூத் வேல்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்.

 

 

 

 

 

Related posts

Former Customs DG and Additional DG remanded

Mohamed Dilsad

Speaker issues another statement

Mohamed Dilsad

அட்டன் செண்பகவத்தைத் தோட்டத்தில் மண்சரிவு

Mohamed Dilsad

Leave a Comment