Trending News

ஈழத்தின் முன்னணிப் பாடகர் எஸ்.ஜி.சாந்தனுக்கு அஞ்சலி

(UDHAYAM, COLOMBO) – ஈழத்தின் முன்னணிப் பாடகர் எஸ்.ஜி.சாந்தன் தனது 57 வயதில் நேற்று காலமனார்.

ஈழத்தின் தலைசிறந்த பாடகர் சாந்தன் அவர்களின் உடலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணி தொடக்கம் இரவு 11.00 மணி வரை யாழ்ப்பாணம் இன்பம் மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

பின்னர் அன்னாரின் பூதவுடல் மாங்குளம் எடுத்துச்செல்லப்பட்டு இன்று திங்கட்கிழமை நண்பகல் வரை வைக்கப்பட்டு பின்னர் மாங்குளம் மகாவித்தியாலய மைதானத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

பின்னர் கிளிநொச்சி விவேகானந்தநகர் இல்லத்தில் மக்களின் அஞ்சலிக்காக அன்னாரின் பூதவுடல் வைக்கப்படவுள்ளது.

நாளை மறுதினம் செவ்வாய் கிழமை மாலை 2.00 மணிக்கு இறுதிக்கிரிகைகள் நடைபெறவுள்ளதாக அறியமுடிகிறது.

Related posts

போலி கடன் அட்டைகள் பயன்பாடு…

Mohamed Dilsad

Cardinal George Pell loses appeal against sexual abuse convictions

Mohamed Dilsad

ළමයින්ට සමාජ මාධ්‍ය තහනම්

Editor O

Leave a Comment