Trending News

நாட்டில் ஜனநாயக கொள்கைகளை தொடர்ந்தும் பாதுகாக்குமாறு அவுஸ்திரேலியா வலியுறுத்தல்

(UTV|COLOMBO)-இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலையை தொடர்ந்து அவதானித்து வருவதாக அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் மரைஸ் பய்னே தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கரமசிங்கவை பதவி நீக்கம் செய்தமை தொடர்பாகவும், அதனைத் தொடர்ந்து இடம்பெற்று வரும் போராட்டங்கள் தொடர்பாகவும் நாம் கவனம் செலுத்தி வருகின்றோம்.

எனவே நாட்டில் ஜனநாயக கொள்கைகளை தொடர்ந்தும் பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் வழியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் நீண்டகால நட்பு நாடு என்ற வகையில் நாட்டில் ஏற்படும் அரசியல் மாற்றங்களை அவுஸ்திரேலியா உன்னிப்பாக அவதானித்து வருகிறது எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

Brothel raided in Malay Street, Colombo

Mohamed Dilsad

Fifty-one arrested at Facebook party with narcotics

Mohamed Dilsad

மஹாசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க பிணையில் விடுதலை…

Mohamed Dilsad

Leave a Comment