Trending News

காமெடி நடிகருக்கு பிரகாஷ்ராஜ் பளார்?

(UTV|INDIA)-நடிகர் பிரகாஷ்ராஜ் படங்களில் வில்லன், குணசித்ர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். கோலிவுட், டோலிவுட்டில் நடித்து வரும் பிரகாஷ்ராஜ் அவ்வப்போது பிரச்னையில் சிக்கிக்கொள்வது வாடிக்கை. சில படங்களில் கொடுத்த கால்ஷீட்படி படப்பிடிப்புக்கு வரவில்லை என்று முன்பு புகார் கூறப்பட்டது. அப்பிரச்னை தீர்க்கப்பட்ட நிலையில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். கொடி படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தவர் அனுபாமா பரமேஸ்வரன்.

இவர் கதாநாயகியாக நடிக்கும் தெலுங்கு படம் ‘ஹலோ குரு பிரேம கோசம்’. பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பின்போது அனுபாமாவை அவர் திட்டியதாக தகவல் பரவியது. தற்போது அப்படத்தில் நடிக்கும் காமெடி நடிகர் சப்தகிரியுடன் மோதல் ஏற்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.

சப்தகிரிக்கும் பிரகாஷ்ராஜுக்கும் வாய்தகராறு ஏற்பட அவரை பிரகாஷ்ராஜ் திட்டியதாகவும் ஒரு கட்டத்தில் கோபத்தில் சப்தகிரி கன்னத்தில் பளார் என அறைவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி பட குழுவினரிடம் கேட்டால் பதில் பேசாமல் மவுனம் காக்கின்றனர். சப்தகிரியும் இதுபற்றி பேச மறுக்கிறாராம். பிரகாஷ்ராஜ் சமீபகாலமாக அரசியல் கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்து வருகிறார். இதனால் சில மாதங்களுக்கு முன் பெங்களூரில் அவர் மீது தாக்குதல் முயற்சி நடந்தது குறிப்பிடத்தக்கது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Twenty five year old sentenced to death over drugs

Mohamed Dilsad

Showers expected to enhance over Sri Lanka

Mohamed Dilsad

இன்று காலை 8 மணியுடன் நிறைவு பெறும் தாதியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம்

Mohamed Dilsad

Leave a Comment