Trending News

காற்றுடன் கூடிய மழையுடனான வானிலை குறைவடையக்கூடும்

(UTV|COLOMBO)-நாடளாவிய ரீதியில் காணப்படும் மழையுடனான வானிலையும் காற்று நிலைமையும் இன்று(20) இரவில் இருந்து படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை அவதான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதோடு, மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும், குறிப்பாக மத்திய, வடமேல், வடமத்திய, தென், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் பதுளை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60Km வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது தற்போதும் உயர்வாகக் காணப்படுவதுடன் இந்நிலைமை ஒகஸ்ட் 20 ஆம் திகதியில் இருந்து சிறிது குறைவடையும் சாத்தியம் காணப்படுகின்றது.

மன்னாரில் இருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் மற்றும் திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 60-70Km வரை காணப்படும். அவ்வேளைகளில் இக்கடற்பரப்புகள் கொந்தளிப்பாகக் காணப்படுவதுடன் இக்கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது 70-80Km வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் இக்கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயத்தில் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Training workshop on drones to be held today

Mohamed Dilsad

நாட்டின் பல பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை

Mohamed Dilsad

Puducherry Government to seek Centre aid for release of fishermen in Sri Lanka

Mohamed Dilsad

Leave a Comment