Trending News

நான் எந்தவொரு சந்தர்பத்திலும் அரசியலுக்கு வர மாட்டேன்-உறுதி

(UTV|COLOMBO)-நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியலில் பிரவேசிக்க மாட்டேன் என்பதனை மிகவும் உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன் என இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

சங்கக்காரவை எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் களமிறக்குவது குறித்து பல்வேறு தரப்பினர் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில், குமார் சங்கக்கார தனது பேஸ்புக் பதிவு ஒன்றின் மூலம் தனது அரசியல் பிரவேசம் குறித்து கருத்து வௌியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் நான் வேட்பாளராக களமிறங்க உள்ளதாக வெளியான அறிக்கைகளை மிகவும் அக்கறையுடன் வாசித்தேன்.

பொதுமக்கள் மற்றும் ஊடகங்களிள் எனது அரசியல் பிரவேசம் தொடர்பில் வெளியிட்ட பல்வேறுபட்ட கருத்துக்கள் தொடர்பில் நான் நன்கு அறிவேன். சிலர் என்னை பொருத்தமான வேட்பாளராக தேர்தெடுப்பதுடன் இன்னும் சிலர் எனது நம்பகத்தன்மை தொடர்பிலும், எனது துறை தொடர்பிலும் கேள்வி எழுப்புகின்றனர்.

பொதுமக்களின் மாறுபட்ட அனைத்து கருத்துக்களுக்கும் நான் மதிப்பளிக்கிறேன். நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியலில் களமிறங்க அபிலாஷைகளை தாங்கிக்கொள்ளவில்லை. அவ்வாறான ஓர் உத்தேசம் கிடையாது. நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியலில் பிரவேசிக்க மாட்டேன் என்பதனை மிகவும் உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

විපක්ෂ නායකගේ සක්වල 321 වැඩසටහනට රිෂාඩ් බදියුදීන් සහ සෙල්වම් අඩයිකලනාදන් එක්වෙයි

Editor O

விஷால் – அனிஷா திருமண திகதி அறிவிப்பு

Mohamed Dilsad

564 traffic accidents recorded in six hours in Dubai on Thursday

Mohamed Dilsad

Leave a Comment