Trending News

இலங்கை கிரிக்கட்டின் தேர்தலை நடத்த நீதிமன்றம் அனுமதி

(UTV|COLOMBO)-இலங்கை கிரிக்கட்டின் தேர்தலை நடத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக கடந்த 31ம் திகதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த இலங்கை கிரிக்கட்டின் தேர்தலை நடத்துவதற்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், புதிதாக தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு தெரிவித்ததையடுத்து தேர்தலுக்கான தடை நீக்கப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று (14) மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி பிரீதி பத்மன் சுரசேன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது, விளையாட்டுத் துறை அமைச்சர் சார்பில் பிரதி சொலிஸ்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன ஆஜராகியிருந்தார்.

இந்த மனு மீண்டும் ஜூலை 04ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Six CEB trade union leaders suspended, island-wide trade union action mooted

Mohamed Dilsad

First consignment of China rice donation arrives

Mohamed Dilsad

Trump set to announce China sanctions after IP probe

Mohamed Dilsad

Leave a Comment