Trending News

முஸ்லிம் மாணவனுக்கு பிணை மறுப்பு

(UTV|COLOMBO)-முகப்புத்தகத்தின் ஊடாக இனங்களுக்கிடையில் வன்முறைகளை ஏற்படுத்தும் விதமான பதிவுகளை மேற்கொண்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கொழும்பின் பிரதான பாடசாலை ஒன்றின் மாணவனுக்கு பிணை வழங்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் மறுத்துள்ளது.

மேலும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மாணவனை 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று (26) கொழும்பு மேலதிக நீதவான் ஷானிமா விஜேபண்டார முன்னிலையில் நடைபெற்ற போது சந்தேகநபரான மாணவன் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரான முஸ்லிம் மாணவன் சிங்களவர் ஒருவரின் பெயரில் முகப்புத்தகத்தில் இனங்களுக்கிடையில் வன்முறைகளை ஏற்படுத்தும் விதமான பதிவுகளை மேற்கொண்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Sri Lanka unveils most modern hi-tech TVET facility with South Korean backing

Mohamed Dilsad

ආපදා හේතුවෙන් මානසික පීඩනයට පත්ව සිටීනම් 1926 අමතන්න

Editor O

Police Commission Chairman resigns

Mohamed Dilsad

Leave a Comment