Trending News

தொடர்ந்து வேலை நிறுத்தப் போராட்டம்

(UTV|COLOMBO)-உயர் கல்வியமைச்சுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததன் காரணமாக தமது வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கப் போவதாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

21வது நாளாகவும் இன்றைய (20) தினம் தமது போராட்டத்தை முன்னெடுப்பதாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் உப தலைவர் எட்வட் மல்வத்தகே கூறினார்.

நேற்றைய தினம் உயர் கல்வியமைச்சின் செயலாளர் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோருக்கு இடையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது.

எவ்வாறாயினும் இதன்போது ஒரு உடன்பாட்டை எட்ட முடியாது போயுள்ளதாக எட்வட் மல்வத்தகே கூறினார்.

எனினும் இன்றைய தினத்திற்குள் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு நியாயமான தீர்வொன்றை வழங்க எதிர்பார்த்துள்ளதாக உயர் கல்வியமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் கூறியுள்ளது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

National Sports and Physical Fitness Promotion Week declared

Mohamed Dilsad

Chris Evans wraps “Avengers,” joins “Knives”

Mohamed Dilsad

Strong winds damage houses in Kiriibbanara, Sevanagala

Mohamed Dilsad

Leave a Comment