Trending News

24 பேர் அதிரடியாக கைது

(UTV|COLOMBO)-தெல்தெனிய – மொரகஹமுல பிரதேசத்தில் அமைந்துள்ள விற்பனை நிலையத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு 9.00 மணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 22 ஆம் திகதி பாரவூர்தியொன்றில் பயணித்துக் கொண்டிருந்த நபரொருவர் மீது மேற்கொண்ட தாக்குதலில் அவர் உயிரிழந்த சம்பவத்தை முன்னிறுத்தி இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

முச்சக்கரவண்டியில் வந்த நால்வர் குறித்த நபரை தாக்கிய நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்தார்.

இந்நிலையில் கடந்த 3 ஆம் திகதி அவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

රනිල් සහ අනුර කරන කුමන්ත්‍රණය ගැන සජිත් කතා කරයි.

Editor O

SDIG Nanayakkra further remanded

Mohamed Dilsad

Google might face record fine in Android monopoly case

Mohamed Dilsad

Leave a Comment