Trending News

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ், ஸ்ரீலங்கன் கேட்டரிங் மற்றும் மிஹின் லங்கா மோசடிகளை கண்டறிய உறுப்பினர்கள் நியமனம்

(UTV|COLOMBO)-ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ், வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் கேட்டரிங் மற்றும் வரையறுக்கப்பட்ட மிஹின் லங்கா ஆகிய நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகளை கண்டறிவதற்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவினால் நேற்று முற்பகல் இந்த நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டது.

 

2006 ஆம் ஆண்டு ஜனவரி 06 ஆம் திகதி முதல் 2018 ஜனவரி 31 ஆம் திகதி வரை இடம்பெற்றதாகக் கருதப்படும் மோசடிகளைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் அனில் குணரத்ன செயற்படவுள்ளார். ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஈ.ஏ.ஜீ.ஆர். அமரசேக்கர, ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க, ஓய்வுபெற்ற பிரதி கணக்காய்வாளர் நாயகம் எம்.டீ.ஏ. ஹரல்ட் மற்றும் இலங்கை கணக்கீட்டு, கணக்காய்வு நியமங்கள் கண்காணிப்பு சபையின் பணிப்பாளர் நாயகம் டபிளியு.ஜே.கே. கீகனகே ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாக செயற்படவுள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

தேயிலைத் தோட்டங்களில் மீள் நடுகை வேலைத்திட்டம்

Mohamed Dilsad

10 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் 5 பேர் கைது

Mohamed Dilsad

Ryan Van Rooyan remanded

Mohamed Dilsad

Leave a Comment