Trending News

பொதுநலவாய விளையாட்டு போட்டிக்கான வீர, வீராங்கனைகள் தெரிவு

(UTV|COLOMBO)-எதிர்வரும் ஏப்ரல் மாதம் அவுஸ்திரேலியாவின் கோல் கோஷ்ட் நகரில் இடம்பெறவுள்ள பொதுநலவாய ஒன்றிய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ள உள்ள மெய்வல்லுனர் வீர, வீராங்கனைகளைத் தெரிவு செய்வதற்கான போட்டி ஹோமாகம – தியகம சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இலங்கையில் உயரம் பாய்தலில் தேசிய வீரர் மஞ்சுள குமார, மீற்றர் 2.24 உயரத்தைப் பாய்ந்துள்ளார். 800 மீற்றர் தேசிய மகளிர் வீராங்கனையான நிமாலி லியனாரச்சி, கயந்திகா அபேரத்ன ஆகியோர் 2 நிமிடம் 5 வினாடிகளில் குறிப்பிட்ட தூரத்தை ஓடி முடித்தனர்.

சம்பத் ரணசிங்ஹ ஈட்டி எறிதல் போட்டியில் 82 மீற்றர் தூரத்திற்கு எறிந்து சாதனை நிலைநாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை தேசிய மெய்வல்லுனர் விளையாட்டு அமைப்பின் வீர வீராங்கனைகள் பலர் இதில் வழமை போன்று தமது ஆற்றல்களை வெளிப்படுத்தினார்கள்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert

 

 

Related posts

US and China sign trade agreement

Mohamed Dilsad

அங்கமுவ நீர்த் தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு

Mohamed Dilsad

Kwasi Nyantakyi resigns from CAF, FIFA

Mohamed Dilsad

Leave a Comment