Trending News

மீன் உற்பத்தி வளர்ச்சி

(UTV|COLOMBO)-கடந்த 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த 2017 ஆம் ஆண்டு மீன் உற்பத்தி வளர்ச்சியடைந்திருந்தது.

கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாத காலப்பகுதியினுள் 3 இலட்சத்து 35 ஆயிரத்து 750 மெற்றிக் டொன் மீன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 1.2 சதவீதம் அதிகரிப்பை காட்டியுள்ளது.

கடந்த வருடம் நிலவிய வரட்சி, கரையோர பகுதியில் நிலவிய கன மழை மற்றும் கடற்கொந்தளிப்பு என்பன மீன் உற்பத்தி துறையில் தாக்கத்தை ஏற்படுத்தின.

எனினும் நாட்டில் மீன் உற்பத்தியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதன்மூலம் தேசிய மீன் உற்பத்திக்கு 49.5 சதவீத பங்களிப்பு கிடைத்துள்ளது.

இதனிடையே, 2018 ஆம் ஆண்டில் இலங்கை கடற்தொழில் கூட்டுதாபனத்திற்கு உட்பட்ட விற்பனை கிளைகள் 50 திறக்கப்படவுள்ளதாகவும் கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அரச வர்த்தக கூட்டுத்தாபனத்திற்கு 61.4 மில்லியன் ரூபா இலாபம்

Mohamed Dilsad

Gnanasara Thera filed an appeal in the Supreme Court

Mohamed Dilsad

சரும ஆரோக்கியத்தை காக்கும் உணவுகள்…

Mohamed Dilsad

Leave a Comment