Trending News

‘சண்டக்கோழி-2’ படம் ஏப்ரல் 14 ரிலீஸ்

(UTV|INDIA)-விஷால் தற்போது பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் `இரும்புத்திரை’ படத்திலும், லிங்குசாமி இயக்கத்தில் `சண்டக்கோழி-2′ படத்திலும் நடித்து வருகிறார்.

இதில் `இரும்புத்திரை’ படம் வருகிற ஜனவரி 26-ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. அதில் `சண்டக்கோழி-2′ படத்தின் ரிலீஸ் தேதியை விஷால் அறிவித்தார்.
`சண்டக்கோழி-2′ படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. லிங்குசாமி இயக்கும் இந்த படத்தில் விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வரலட்சுமி சரத்குமார் வில்லியாக நடிப்பதாக கூறப்படுகிறது. ராஜ்கிரன், சதீஷ், சூரி, ஹரீஷ் பேரடி, அப்பானி சரத், ஹரீஷ் சிவா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பாக்டரி மூலம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
விஷாலின் 25-வது படமாக இந்த படம் உருவாகிறது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

Chile cancels climate and Apec summits amid mass protests

Mohamed Dilsad

Woman shot dead in Venezuela voting queue

Mohamed Dilsad

அஸ்கிரிய மகாநாயக்க தேரரால் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம்

Mohamed Dilsad

Leave a Comment