Trending News

வடமேல் மாகாண தொழில் முயற்சியாளர்களை பாராட்டும் ‘விஜயாபிமானி’ விழா

(UTV|COLOMBO)-வடமேல் மாகாண தொழில் முயற்சியாளர்களை பாராட்டும் ‘விஜயாபிமானி’ பாராட்டு விழா குருணாகலையில் உள்ள மாகாண சபை கேட்போர்கூடத்தில்  கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் இடம்பெற்ற போது, ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

வடமேல் மாகாண பொருளாதாரத்திற்கு நேரடிப் பங்களிப்புகளை வழங்கும் தொழில் முயற்சியாளர்களை பாராட்டி அவர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் வடமேல் மாகாண சபையின் வழிகாட்டலில் வடமேல் மாகாண விவசாய சேவைகள் பணியகம் இவ்விருது விழாவை ஏற்பாடு செய்துள்ளது.
அமைச்சர்களான எஸ்.பி. நாவின்ன, பிரதி அமைச்சர் தாரானாத் பஸ்நாயக, வடமேல் மாகாண ஆளுநர் அமரா பியசீலி ரத்னாயக, முதலமைச்சர் தர்மசிறி தசநாயக ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

Global Pulse Confederation An Honour For Sri Lanka

Mohamed Dilsad

பெல்ஜியம் நாட்டின் பிரதமர் பதவி விலகுவதாக அறிவிப்பு

Mohamed Dilsad

பழைமை வாய்ந்த வெடிபொருளொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

Mohamed Dilsad

Leave a Comment