Trending News

பிக் பாஸ் போட்ட திட்டத்தை சொதப்பிய ஸ்ரீ!

(UDHAYAM, COLOMBO) – பிக் பாஸ் நிகழ்ச்சி எழுதிக் கொடுத்து நடப்பது என்தை நிரூபிக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. பிக் பாஸ் வீட்டுக்கு வந்த வேகத்தில் ஸ்ரீயும், ஜூலியும் தான் நெருக்கமானார்கள்.

ஜூலிக்கு கையில் காயம் ஏற்பட்டபோது ஸ்ரீ மருந்து போட்டார். இந்த காட்சி ஹிந்தி பிக் பாஸில் இருந்து காப்பியடிக்கப்பட்டது. இதற்கிடையே ஸ்ரீ உடல்நலக்குறைவை காரணம் காட்டி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

ஹிந்தி பிக் பாஸின் பிளான்படி கையில் காயம் ஏற்பட்ட கவுகர் கானும், அதற்கு மருந்து போட்ட குஷால் டாண்டனும் நிகழ்ச்சி முடிவதற்குள் காதலர் ஆனார்கள்.

ஹிந்தி பிக் பாஸ் 7வது சீசனில் தான் கவுகர் கான், குஷால் டாண்டன் கலந்து கொண்டு காதலில் விழுந்து பிக் பாஸ் டைட்டிலையும் வென்றனர். அதே திட்டத்தை தமிழில் செய்யவிடாமல் ஸ்ரீ சொதப்பிவிட்டார்.

பிக் பாஸ் திட்டத்தை தெரிந்து தான் ஜூலியுடன் கோர்த்துவிட்டுவிடுவார்கள் என்று பயந்து ஸ்ரீ ஓடிப் போய் விட்டார் போல. அவர் ஓடிப் போனதால் பிக் பாஸ் தனது திட்டத்தை மாற்ற வேண்டியதாகிவிட்டது.

Related posts

Kuruminiyagala Forest fire doused – Police

Mohamed Dilsad

குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான காவற்துறை பரிசோதகரின் இடமாற்றம் இரத்து

Mohamed Dilsad

Pacific Islands may boycott Rugby World Cup

Mohamed Dilsad

Leave a Comment