Trending News

கடற்படை வீரர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை

(UTV|COLOMBO) – இந்திய கடற்படை வீரர்கள், சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்திய கடற்படை வீரர்கள் பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களையும் அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட வணிக தளங்களையும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடற்படை தளங்கள் மற்றும் போர்க்கப்பல்களில் இருக்கும்போது ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தவும் தடை விதித்து கடற்படை உத்தரவிட்டுள்ளது.

சமூக வலைத்தளம் வாயிலாக எதிரிநாட்டு உளவு அமைப்புகளுக்கு, முக்கிய தகவல்களை கசியவிட்டதாக கடற்படையைச் சேர்ந்த 7 வீரர்கள் கைது செய்யப்பட்டனர். இதன் காரணமாக குறித்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றன.

Related posts

“Terrorism feeds Terrorism” – President’s Counsel Ali Sabry

Mohamed Dilsad

20 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்த இளைஞர்

Mohamed Dilsad

மன்னார் எருக்கலம்பிட்டி, பாதைக்கு 18 கோடி ஒதுக்கீடு

Mohamed Dilsad

Leave a Comment