Trending News

பிரதமரை சந்திக்க தயாராகும் கூட்டமைப்பு

(UTVNEWS | COLOMBO) –பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுடன் சந்திப்பொன்றை செய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகி வருவதாக அறிய முடிகின்றது.

நேற்று முன்தினம் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டத்தின் போதும் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவுடனான சந்திப்பு உட்பட இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சிக்காலத்தில் வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியின் மூலமாக மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் நிறைவுறாது இருக்­கின்­றன.

இந்நிலையிலேயே நாட்டின் நிதி அமைச்சர் என்ற வகையில் பிர­தமர் மஹிந்த ராஜபக்ஸவுடன் குறித்த விடயம் சம்பந்தமாக பேச்சுவார்த்தைகளை நடத்தி முடிவொன்று எடுக்க வேண்டும் என்று கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

Related posts

‘Shrouded in secrecy’: Saudi women activists due back in court

Mohamed Dilsad

CIA Chief made secret trip to North Korea

Mohamed Dilsad

Australian swimmer refuses to join rival on podium

Mohamed Dilsad

Leave a Comment