Trending News

பேரூந்து மீது லொரி மோதிய விபத்தில் 20 பேர் பலி

(UTV|COLOMBO) – கவுதமாலா நாட்டில் பயணிகள் பேரூந்து ஒன்று விபத்தில் சிக்கியதில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கவுதமாலா சிட்டியில் இருந்து கிழக்கே 150 கி.மீ. தொலைவில் கவுலான் நகராட்சி பகுதியில் சென்றபோது, பேரூந்தின் பின்புறம் லாரி ஒன்று வேகமாக மோதி விபத்து ஏற்படுத்தியது.

இந்த கோர விபத்தில் 20 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தகவலறிந்து அங்கு சென்ற மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

Related posts

ஜனாதிபதி – டெங்கு ஒழிப்பு செயலணி இன்று விசேட கலந்துரையாடல்

Mohamed Dilsad

DMC cautions as heat runs high over country

Mohamed Dilsad

புத்தளத்தில் சில பகுதிகளில் கடலரிப்பின் வீதம் அதிகரிப்பு

Mohamed Dilsad

Leave a Comment