Trending News

அரச நிறுவனங்களுக்கு உயரதிகாரிகளை நியமிக்க விஷேட குழு

(UTV|COLOMBO) – அரச நிறுவனங்களுக்குத் திறமையான மற்றும் தகுதியான உயரதிகாரிகளை நியமிப்பதற்கான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கு ஜனாதிபதி செயலகத்தின் அறுவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ஆலோசனைக்கு அமைய இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட அரச அதிகாரியான சுமித் அபேசிங்க இந்த குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சுசந்த ரத்நாயக்க, பேராசிரியர் நாலக்க கொடஹேவா, டயன் கோமஸ், கலாநிதி பிரசன்ன குணசேன மற்றும் பேராசிரியர் ஜகத் வெல்லவத்த ஆகியோர் இந்த குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.

அரச நிறுவனங்களுக்கு தகுதியானவர்களைத் தெரிவுசெய்து எதிர்வரும் டிசம்பர் 18ஆம் திகதிக்கு முன்னர் பரிந்துரைக்குமாறு ஜனாதிபதி செயலகத்தால் இந்தக் குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

GCE O/L 2017 Examination results released

Mohamed Dilsad

மருந்து மூலிகைகளை உற்பத்தி செய்வதற்கான திட்டம்-அமைச்சர் ராஜித

Mohamed Dilsad

‘Thel Kumara’ shot dead

Mohamed Dilsad

Leave a Comment