Trending News

இராணுவ புலனாய்வு உறுப்பினர்கள் 9 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

(UTV|COLOMBO) – கிரிதலே இராணுவ முகாமின் கட்டளை அதிகாரியாக செயற்பட்ட லெப்டினன் கேர்னல் ஷம்மி அர்ஜூன குமாரரத்ன உள்ளிட்ட இராணுவ புலனாய்வு உறுப்பினர்கள் 9 பேருக்கு எதிராக கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் இன்று(27) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை இரசியமாகவும் சட்டவிரோதமாகவும் தடுத்துவைக்கும் நோக்கில், கடத்தியமை மற்றும் கொலை செய்தமை உள்ளிட்ட 17 குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகளான, சம்பத் அபேகோன், சம்பத் விஜேரத்ன மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

2010 ஜனவரி 24 மற்றும் 27 ஆகிய காலப்பகுதிக்குள், கிரிதலே, கொஸ்வத்த மற்றும் பத்தரமுல்ல ஆகிய பகுதிகளில், தம்முடன் தொடர்பில்லாத நபர்களுடன் இணைந்து பிரகீத் எக்னெலிகொடவை கடத்திச் சென்றமை தொடர்பில், பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததையடுத்து, நீதவான் நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவிற்கு அமைய பிரதிவாதிகளுக்கு பிணை வழங்கி, பிரதிவாதிகள் வௌிநாடு செல்வதற்கு தடை விதித்துள்ள நீதிமன்றம், அவர்களின் கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு எதிர்வரும் 18 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

Related posts

Showers or thundershowers expected in the evening

Mohamed Dilsad

Over 50 Officials on election duty hospitalised

Mohamed Dilsad

தம்மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்தாரா கிறிஸ்ட்சர்ச் தாக்குதல்தாரி?

Mohamed Dilsad

Leave a Comment