Trending News

எட்டு ரயில் பெட்டிகள் இறக்குமதி

(UTV|COLOMBO) – ரயில் சேவையை மேலும் தரம் உயர்த்துவதற்கு அடுத்த மாதம் எட்டு ரயில் பெட்டிகள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

சீனாவிலிருந்து ஆறு புதிய பெட்டிகளும், இந்தியாவிலிருந்து இரண்டு பெட்டிகளும் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

ஒரு பெட்டியின் பெறுமதி 10.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிநவீன எஸ் -14 ரயில் பெட்டியில் இரண்டு என்ஜின்கள் உள்ளதுடன், இது இரண்டு குளிரூட்டப்பட்ட பெட்டிகளையும், இரண்டு இரண்டாம் வகுப்பு பெட்டிகளையும், மூன்று மூன்றாம் வகுப்பு பெட்டிகளையும் கொண்டுள்ளது.

இவை மலையகத்தில் செயல்பட வடிவமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

Sri Lanka rupee hits record low of 166.64 per dollar

Mohamed Dilsad

பாடசாலை சுற்றாடல் பகுதியில் டெங்கு

Mohamed Dilsad

உணவு கிடைக்காமல் எலிக்கறியை உணவாக உட்கொள்ளும் மனிதர்கள்

Mohamed Dilsad

Leave a Comment