Trending News

அட்லீயின் அதிஷ்ட நடிகர் இவர் தான்

(UTVNEWS|COLOMBO) – விஜய் அண்ணன் தான் எனக்கு ராசி என இயக்குனர் அட்லீ கூறியுள்ளார். பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் இதனை கூறியுள்ளார்.

இப்படம் தீபாவளியன்று திரைக்கு வரவுள்ளதுடன், இப்படத்தில் விஜய், நயன்தாரா, விவேக், இந்துஜா, கதிர், ஆனந்த்ராஜ் போன்ற பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்த விழாவில் இயக்குனர் அட்லீ பேசியதாவது:- விஜய் அண்ணா என்னை பிற நடிகர்களுடனும் பணியாற்றுமாறு அறிவுறுத்துவார். ஆனால் நான் எந்த கதை எழுதினாலும், எனக்கு மனதில் முதலில் வருவது விஜய் அண்ணா தான். மெர்சல் படத்திற்கு பிறகு பெரிய வாய்ப்புகள் நிறைய வந்தன. இருந்தாலும் என்னுடய லக்கி நடிகர் விஜய் அண்ணா தான் என்று அட்லி கூறியுள்ளார்

மேலும் என் அண்ணனுக்கு நான் தான் படம் பண்ணுவேன். தெறியை விட இரண்டு மடங்கு பெரியது மெர்சல். மெர்சலை விட பிகில் மூன்று மடங்கு பெரியதாக இருக்கும். கமர்சியல் படமா விளையாட்டு படமா என்பதை தாண்டி உங்களுக்கு பிடிச்ச படமா பிகில் இருக்கும்.

ராஜா ராணி கதை சொல்லும்போது ஒரு சட்டையோட கதை சொன்னேன் ஒகே அயிடுச்சு. அதே சட்டை ராசினு தெறி கதை சொன்னேன் அதுவும் வெற்றியடைந்தது அந்த ராசியான சட்டை மெர்சல் அப்போ இல்லை. இருந்தாலும் அண்ணன நம்பி போனேன் மெர்சல் ஒகே சொன்னார். அப்போ தான் புரிஞ்சது சட்டை ராசி இல்ல, விஜய் அண்ணன் தான் ராசின்னு. இவ்வாறு அவர் பேசினார்.

Related posts

අජිත් නිවාඩ් කබ්රාල්ට එරෙහි නඩුව විභාගයට දිනදෙයි

Editor O

GMOA threatens island-wide strike

Mohamed Dilsad

Spanish diver survives 60 hours in air bubble

Mohamed Dilsad

Leave a Comment