Trending News

வனாட்டு தீவில் 6.0 ரிகட்ர் அளவில் நிலநடுக்கம்

(UTVNEWS|COLOMBO) – ஆஸ்திரேலியா அருகிலுள்ள வனாட்டு தீவில் 6.0 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆஸ்திரேலியாவுக்கு 1,750 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள வனாட்டு. தீவு புவித்தட்டுகள் அடிக்கடி நகர்கிற இடத்தில் அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.

இநநிலையில், நேற்று அங்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.0 புள்ளிகளாக பதிவானது. இது சோலா நகருக்கு 63 கி.மீ. தென் மேற்கில் 114.65 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியது.

Related posts

ஹப்புத்தளை நகரில் கேபிள் கார் வசதி

Mohamed Dilsad

ACMC calls for restraint, unity to achieve reconciliation

Mohamed Dilsad

ரயில் குறுக்கு வீதியில் பயணித்த 8 பேருக்கு அபராதம்

Mohamed Dilsad

Leave a Comment