Trending News

கீர்த்தி சுரேஷ் சிறந்த நடிகை – 66வது தேசிய விருது முழு விபரம் (video)

(UTVNEWS | COLOMBO) – 2018ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த நடிகையாக கீர்த்தி சுரேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடிகை சாவித்ரி வாழ்க்கையை மையமாக வைத்து தெலுங்கில் வெளிவந்த ‛மகாநடி’ படத்தில் நடித்தமைக்காக அவருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் இப்படம் ‛நடிகையர் திலகம்’ என்ற பெயரில் மொழிமாற்றமாகி வெளியானது.

தேசிய விருது பெற்ற சிறந்த திரைப்படங்கள்
சிறந்த தமிழ் படம் – பாரம்

சிறந்த இந்தி படம் – அந்தாதுன்

சிறந்த மலையாளம் படம் – சுடானி ஃப்ரம் நைஜீரியா

சிறந்த அசாமிய படம் – புல்புல் கேன் சிங்

சிறந்த தெலுங்கு படம் – மகாநதி

சிறந்த நடிகர்கள்
1. ஆயுஷ்மான் குரானா – அந்தாதுன் (இந்தி)

2. விக்கி கௌஷல் – உரி (இந்தி)

சிறந்த பின்னணி பாடகர் (ஆண்) – அர்ஜித் சிங் – பத்மாவத் (இந்தி)
சிறந்த பின்னணி பாடகர் (பெண்) – பிந்து மாலினி – நதிசரமி (கன்னடா)
சிறந்த துணை நடிகை – சுரேகா சிக்ரி – பதாய் ஹோ (இந்தி)
சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் – பதாய் ஹோ (இந்தி)

சமூக பிரச்சனையை பேசும் சிறந்த திரைப்படம் – பேட்மேன் (இந்தி)
சிறந்த ஆடை அலங்காரம் – மகாநதி (தெலுங்கு)
சிறந்த இசை – சஞ்சை லீலா பன்சாலி, பத்மாவத் திரைப்படத்திற்காக (இந்தி)
சிறந்த நடனம் – கூமர் பாடல், பத்மாவத் திரைப்படம் (இந்தி)

 

சிறந்த ஒளிப்பதிவாளர் – எம் ஜி ராதாகிருஷ்ணன், ஒலு (மலையாளம்) திரைப்படத்திற்காக
சிறந்த பின்னணி இசை – உரி (இந்தி)
படப்பிடிற்கான சிறந்த மாநிலம் – உத்தராகண்ட்

Related posts

சம்மாந்துறை , கல்முனை பிரதேசங்களுக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம்

Mohamed Dilsad

தீக்குச்சி உற்பத்தி நிலையம் ஒன்றில் தீ பரவல்

Mohamed Dilsad

Finland election: Tough coalition talks after split poll

Mohamed Dilsad

Leave a Comment