Trending News

பிரியாவிடை பேச்சில் மகிந்தவுக்கு நன்றி தெரிவித்த மலிங்க(photo)

(UTVNEWS | COLOMBO) – இறுதி ஒருநாள் சர்வதேச போட்டியில் விளையாடிய மலிங்க தனது பிரியாவிடை பேச்சின் போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள், அவர் வழங்கிய ஆதரவினால் தான் எதிர்பார்த்ததை விட அதிக காலம் விளையாட முடிந்தது” என தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், சில ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு பலத்த காயம் ஏற்பட்டபோது, ​​மகிந்த ராஜபக்ஸ அவர்கள் வைத்தியர் எலியந்தா வைட் என்பவரை அறிமுகப்படுத்தினார். அவர் தான் குணமடைய பெரிதும் உதவினார்.

ராஜபக்ச மற்றும் வைத்தியர் எலியந்தா வைட் இல்லையென்றால் தன்னால் தொடர்ந்து விளையாட முடிந்திருக்காது எனவும் லசித்த மலிங்க கூறினார்.

மேலும்,ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள தான், இருபதுக்கு -20 கிரிக்கெட்டில் தொடர்ந்தும் விளையாடுவேன் என லசித் மலிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

லசித் மாலிங்கவின் ஓய்வில் ஜானாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும்விளையாட்டு அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ உள்ளிட்ட அமைச்சர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தமை சிறப்பம்சமாகும்.

Related posts

யானை தந்தங்களுடன் மூன்று பேர் கைது

Mohamed Dilsad

Geetha Kumarasinghe’s Parliament seat abolished

Mohamed Dilsad

Brexit: No 10 to push again for vote on Boris Johnson’s deal

Mohamed Dilsad

Leave a Comment