Trending News

விம்பிள்டன் பட்டத்தை வென்றார் ஜெகோவிச்

(UTVNEWS | COLOMBO) – விம்பிள்டன் இறுதிப் போட்டியில் 5 மணி நேரம் போராடி பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.

லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஜோகோவிச் – பெடரர் பலப்பரீட்சை நடத்தினர். முதல் செட்டை ஜோகோவிச் 7(7)-6(5) எனக் கைப்பற்றினார். 2ஆவது செட்டை பெடரர் 6-1 என எளிதில் கைப்பற்றினார்.

3ஆவது செட்டை ஜோகோவிச் 7(7)-6(4) எனக் கைப்பற்றினார். 4ஆவது செட்டை 6-4 என ரோஜர் பெடரர் கைப்பற்றினார். இதனால் நான்கு செட்களில் இருவரும் தலா இரண்டில் வெற்றி பெற்றதால் 2-2 என சமநிலைப் பெற்றனர்.

சாம்பியனை தீர்மானிக்கும் ஐந்தாவது செட்டில் இருவரும் மல்லுகட்டினர். ஜோகோவிச் சர்வீசை தொடங்கினார். முதல் சுற்றை ஜோகோவிச் கைப்பற்றினார். 2-வது சுற்றை பெடரர் கைப்பற்றினார். 3-வது சுற்றை ஜோகோவிச் கைப்பற்றினார். ரோஜர் பெடரின் சர்வீஸ் செய்த 4-வது சுற்றை ஜோகோவிச் அட்டகாசமாக எதிர்கொண்டார். இருந்தாலும் கடைசியில் பெடரர் கைப்பற்றினார்.

இறுதியில் 5 மணி நேரம் நடைபெற்ற போட்டியில் ஜோகோவிச் 7-6, 6-1, 7-6, 4-6, 13-12 என்ற செட் கணக்கில் ரோஜர் பெடரரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

Related posts

Over 3,000 MT of rice distributed to Lanka Sathosa outlets

Mohamed Dilsad

ஞானசார தேரர் தொடர்பில் மகிந்தவுக்கு எழுந்துள்ள சந்தேகம்

Mohamed Dilsad

UPDATE: Government and Neville Fernando Hospital agreement signed

Mohamed Dilsad

Leave a Comment