Trending News

1 முதல் 5 வரையான மாணவர்களுக்கான இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

(UTV|COLOMBO) இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் தரம் 1 முதல் 5 வரையான மாணவர்களுக்கான நாளை (13ஆம் திகதி) ஆரம்பமாகவுள்ளன.

அனைத்துப் பாடசாலைகளிலும் பாடசாலை வளாகங்களிலும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எம். ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

பெற்றோர் அச்சமின்றி தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிவைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், பொலிஸார் மற்றும் முப்படையினர் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக, இராணுவத்தளபதி மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

Prime Minister wants India and Japan cash to balance China

Mohamed Dilsad

தகவல் தொழில்நுட்பப் பரீட்சை 14ஆம் திகதி ஆரம்பம்

Mohamed Dilsad

HHIMS for Government hospitals soon

Mohamed Dilsad

Leave a Comment