Trending News

விண்ணப்பங்களை அனுப்பாதவர்கள் விரைந்து விண்ணப்ப படிவங்களை அனுப்பி வைக்குமாறு கோரிக்கை

(UTV|COLOMBO) இந்த முறை கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சை மற்றும் உயர் தர பரீட்சைகளுக்கு தோற்றும், பரீட்சாத்திகள் அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் 50 சதவீதமே தற்போது வரை கிடைத்துள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தினால்  விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் விண்ணப்பப்படிவங்களை அனுப்பி வைக்காமையானது, பரீட்சைகளுக்கு முன்னர் அடையாள அட்டையை பெற்றுக் கொடுப்பதில் பெரும் சவால் ஏற்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உரிய முறையில் முழுமையாக்கப்பட்ட விண்ணப்பப்படிவத்தை மார்ச் மாதம் 31ம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு பாடசாலை அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

எனவே, விண்ணப்பங்களை அனுப்பாதவர்கள் விரைந்து விண்ணப்படிவங்களை அனுப்பி வைக்குமாறு ஆட்பதிவு திணைக்களம் கோரியுள்ளது.

 

 

 

Related posts

Gold smuggled to Ramanathapuram from Sri Lanka seized

Mohamed Dilsad

EC to meet political party reps & monitors today

Mohamed Dilsad

Canada and British Envoys visit the North

Mohamed Dilsad

Leave a Comment