Trending News

ஆசிய, பசுபிக் விவசாய கூட்டுறவு அபிவிருத்தி வலையமைப்பு நிறைவேற்றுக்குழுக்கூட்டம் பங்கொக்கில் ஆரம்பம்!

ஆசிய மற்றும் பசுபிக் நாடுகளின் விவசாய கூட்டுறவு அபிவிருத்தி வலையமைப்பின் நிறைவேற்றுக்குழுக்கூட்டம் நேற்று (07) தாய்லாந்து , பங்கொக்கில் ராண்ட்ப் (RANDF)ஹோட்டலில் ஆரம்பமானது.  இந்த மாநாட்டில் ஆசியா மற்றும் பசுபிக் நாடுகளின் விவசாய கூட்டுறவு அபிவிருத்தி வலையமைப்பின் உப தலைவரும், கூட்டுறவு இளைஞர் வலுவூட்டல்  அமைப்பின் தலைவருமான எம்.எஸ். முஹம்மது றியாஸ் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் நசீர் ஆகியோர் இலங்கையின் சார்பில் பங்கேற்கின்றனர்.

அமைப்பின் தலைவர் சந்திப்குமார் நாயக் தலைமையில் ஆரம்பமான இந்த நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தில் பங்களாதேஷ், சீனா, ஈரான், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.

இன்று (08ஆம் திகதி) இரண்டாவது நாளாகவும்  இந்த மாநாடு தொடர்ச்சியாக நடைபெறுவதுடன் மாநாட்டு அமர்வின் விசேட அம்சமாக சர்வதேச கூட்டுறவு வர்த்தக கண்காட்சி இடம்பெறுகின்றது. மாநாட்டில் பங்கேற்கும் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள்  நாளை  வெளிக்கள சுற்றுலா பயணம் ஒன்றையும்  மேற்கொள்கின்றனர்.

ஆசிய மற்றும் பிராந்திய நாடுகளின் கூட்டுறவின் அடிப்படையிலான விவசாயத்துறையை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு இந்த துறையில் நவீனத்துவங்களை புகுத்தும் வகையில் பல்வேறு விடயங்களை ஆராய்ந்தது.

அத்துடன் முதன் முதலாவதாக இந்தியாவின் தலைநகர் டெல்லியில் ஒக்டோபர் மாதம் 11, 12 மற்றும் 13ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள இந்திய சர்வதேச கூட்டுறவு வர்த்தக கண்காட்சி தொடர்பான ஏற்பாடுகள் குறித்து இந்த நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தில் ஆராயப்படுமென அமைப்பின் உப தலைவர் ரியாஸ் தெரிவித்தார்.

 

 

 

 

Related posts

ගුරු පත්වීම් සහ ගුරු මාරු වීම් පිළිබඳ නව ප්‍රතිපත්තයක්

Mohamed Dilsad

Central Bank Report presented to President

Mohamed Dilsad

Is Rajinikanth’s Next On Tamil Don Mirza Haji Mastan?

Mohamed Dilsad

Leave a Comment