Trending News

232 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த இலங்கை

(UTV|COLOMBO) இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை அணி 47 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களை இழந்து 231 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

முதலில் களமிறங்கிய இலங்கை அணி சார்பில் குசல் மென்டிஸ் 60 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன் ஓசத பெர்ணான்டோ 49 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

தென்னாபிரிக்கா அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய இம்ரான் தாஹிர் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.

இதன்படி தென்னாபிரிக்கா அணிக்கு 232 என்ற வெற்றியிலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

 

Related posts

Over 6,000 persons affected due to inclement weather

Mohamed Dilsad

216 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய புயல் காரணமாக 6 பேர் உயிரிழப்பு

Mohamed Dilsad

மீன்பிடித் துறைமுகங்களிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

Mohamed Dilsad

Leave a Comment