Trending News

பெற்றோர் – குழந்தைகளுக்கு இடையேயான உணர்வை பேசும் “மங்கி டாங்கி”

(UTV|INDIA)-தற்போதைய காலகட்டத்தில் பணத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் பெற்றோர்களே அதிகம். `மங்கி டாங்கி’ படத்தின் கதைக்களமும், பெற்றோருக்கும், குழந்தைக்கும் இடையேயான உணர்வை பேசும் படமாக உருவாகிறது.

குழந்தை வளர்ப்பில் அதிக கவனம் தேவை என்னும் கருத்தை வலியுறுத்தி உருவாகும் இந்த படத்தை அபி ஆனந்த் மற்றும் சலீஷ் சுப்ரமணியம் இணைந்து இயக்குகின்றனர். ரூபி பிலிம்ஸ் சார்பாக ஹஷீர் இந்த படத்தை தயாரிக்கிறார்.
“இயந்திரமயமான இந்த காலத்தில் குழந்தை வளர்ப்பு என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. குழந்தைகள் பெற்றோர்களின் அன்புக்காகவும், நேரத்திற்காகவும் ஏங்குகிறார்கள். அன்புக்கு ஏங்கும் ஒரு குழந்தை கடத்தப்பட்டால் என்னவாகும் என்பதை பிரபல ஹாலிவுட் திரைப்படமான `பேபிஸ் டே அவுட்’ பாணியில், பயணிக்கும் திரைப்படமாக இது உருவாகிறது என்று தயாரிப்பாளர் ஹஷீர் கூறினார்.
`மங்கி டாங்கி’ திரைப்படத்தில் நடிகர்கள் ஸ்ரீராம், கிஷோர், பேபி யுவினா, யோஜ்ஜைபீ மற்றும் வந்தனா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
சூரஜ் குரூப் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு, கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். ரிசல் ஜைனி படத்தொகுப்பை கவனிக்கிறார்.
தற்போது தேனியில் `மங்கி டாங்கி’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Related posts

විපක්ෂ නායක කාර්යාලය මහජනතාව සඳහා විවෘතයි – විපක්ෂ නායක සජිත් ප්‍රේමදාස

Editor O

Army Commander discusses vital issues with Northern Chief Minister

Mohamed Dilsad

Leave a Comment