Trending News

இ.போ.ச ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பில்

(UTV|COLOMBO)-பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, மன்னார் இலங்கை போக்குவரத்து சபை சாலை ஊழியர்கள் உட்பட வட மாகாணத்தில் உள்ள ஏழு சாலைகளின் ஊழியர்கள் இன்று (04) காலை முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நிர்வாகத்திறமை அற்ற வட மாகாண பிராந்திய முகாமையாளரினால் இன்றைய காலத்தில் வட பிராந்திய சாலைகள் இழுத்து மூடப்பட வேண்டிய கட்டாயத்தில் இயங்கி வருகின்றதாகவும், ஏற்கனவே இ.போ.ச சபையினர் ஆகிய தம்மால் எழுத்து மூலம் உயர் பீடங்களுக்கு அறிவித்துள்ள பத்து குற்றச்சாட்டுகளுக்கு உரிய தீர்வு கிடைக்கப்பெறாத காரணத்தினாலும், வட பிராந்திய தொழிலாளர்கள் மிகுந்த அச்சத்துடனும் கவலையுடனும் தாங்கள் பணியாற்றி வருவதாகவும் இது வரை பொதுமக்களுக்கு அவர்களின் சேவைகள் பாதிக்கப்படாத வகையில் இரு போராட்டங்களை வட பிராந்திய முகாமையாளருக்கு எதிராக மேற்கொண்டிருந்தோம்.

ஆனால் இன்று வரை தீர்வுகள் கிடைக்கப்பெறவில்லை. இதனால் வேறு வழியின்றி வட பிராந்திய தொழிலாளர்கள் தமது நன்மையினை கருதி வட பிராந்திய முகாமையாளரினை வடக்கில் இருந்து வெளியேற்றுமாறு தெரிவித்து இன்று பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக இ.போ.ச ஊழியர்கள் தெரிவித்தனர்.

Related posts

India’s Congress urges delay to Modi biopic

Mohamed Dilsad

ஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை

Mohamed Dilsad

ரஜினிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

Mohamed Dilsad

Leave a Comment