Trending News

பாதுகாப்பு சபையின் பிரதானி இன்று(27) C.I.D யிற்கு

(UTV|COLOMBO)-முன்னாள் கடற்படைத் தளபதி மற்றும் பாதுகாப்பு சபையின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிர​தேசங்களிலிருந்து 11 மாணவர்களை கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நேவி சம்பத் என்பவருக்கு அடைக்கலம் வழங்கிய சம்பவம் தொடர்பாக வாக்குமூலமளிப்பதற்காகவே இவர் இன்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட ஒருவருக்கு அடைக்கலம் வழங்கியமைத் தொடர்பில், இவரைக் கைது செய்வதற்கு போதுமானளவு சாட்சிகள் இருந்த போதிலும் ரவீந்திரவை கைதுசெய்யாதது ஏன் என பல தடவைகள் குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் விசாரித்துள்ளனர்.

 

 

 

 

 

 

Related posts

No fuel price revision in April

Mohamed Dilsad

Cabinet cannot challenge Parliament-PM

Mohamed Dilsad

பொதுத் தேர்தல் நடத்துவதற்கு முன்னர் சட்ட ரீதியான அரசாங்கம் வேண்டும்

Mohamed Dilsad

Leave a Comment