Trending News

முச்சக்கரவண்டிக் கட்டணங்கள் இன்று முதல் அதிகரிப்பு…

(UTV|COLOMBO)-எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய, முச்சக்கரவண்டிக் கட்டணத்தை இன்று(15) முதல் அதிகரிப்பதற்கு, முச்சக்கரவண்டிகள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரண்டாம் கிலோமீற்றருக்கான கட்டணத்தை 5 ரூபாவால் அதிகரிப்பதாக தேசிய ஒன்றிணைந்த முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் ஊழியர்களின் சங்கத்தின் செயலாளர் எல். ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இன்று(15) முதல் மேல் மற்றும் தென் மாகாணங்களில் மட்டும் இரண்டாவது கிலோமீற்றருக்கான கட்டணத்தை 10 ரூபாவால் அதிகரிப்பதாக சுயவேலைவாய்ப்பு ஊழியர்களின் முச்சக்கரவண்டி சங்கம் தெரிவிக்கின்றது.

இந்நிலையில், எரிபொருள் விலைத் திருத்ததிற்கு அமைய தமது சங்கமும் கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுமில் ஜயரூக் கூறியுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Two arrested transporting 50kg heroin on expressway

Mohamed Dilsad

Suspect in BMW sports car accident remanded

Mohamed Dilsad

பண்டாரகம பிரதேச சபையில் பதற்ற நிலை

Mohamed Dilsad

Leave a Comment