Trending News

சச்சினை நெருங்கும் விராட் கோலி?

(UTV|INDIA)-கிரிக்கெட்டின் கடவுள் என்று கருதப்படுபவர் ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன். அவருக்குப்பின் கிரிக்கெட்டில் சச்சின் தெண்டுல்கர் மிகச்சிறந்த வீரராக கருதப்படுகிறார். 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 51 சதங்களுடன் 15921 ரன்களும், 463 ஒருநாள் போட்டியில் 49 சதங்களுடன் 18426 ரன்களும், ஒரேயொரு டி20 போட்டியில் 10 ரன்களும் என சர்வதேச போட்டியில் 34357 ரன்கள் அடித்துள்ளார். சர்வதேச போட்டியில் 100 சதம் அடித்த ஒரே வீரர் சச்சின்தான்.

பேட்டிங்கில் சச்சினைத் தொட யாராலும் முடியாது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறிவந்தனர். அப்போதுதான் விராட் கோலி இந்திய அணியில் இடம்பிடித்தார். கடந்த நான்கு ஆண்டுகளாக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட் கோலி ஒருநாள் போட்டியில் 33 சதங்களும், டெஸ்ட் போட்டியில் 22 சதங்களும் அடித்துள்ளார்.

இவர் சச்சின் அடித்துள்ள 100 சதங்களை தொட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விராட் கோலி மட்டுமே சச்சின் தெண்டுல்கரை நெருங்கியுள்ளார் என்ற பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஷ்டாக் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சக்லைன் முஷ்டாக் கூறுகையில் ‘‘ஒரு பேட்ஸ்மேனாக சச்சின் தெண்டுல்கர் மிகப்பெரிய வீரர். இரண்டு காலக்கட்ட வீரர்களை ஒப்பிடக்கூடாது. ஆனால், தற்போதையை நிலையில் விராட் கோலி மட்டுமே சச்சினை நெருங்கியுள்ளார்.

நாங்கள் இங்கிலாந்து சப்போர்ட் ஸ்டாஃப்களுடன் விராட் கோலி டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டில் எப்படி ரன்கள் சேர்த்தார் என்பது குறித்து பேசிக் கொண்டிருந்தோம். 3-வது டெஸ்டில் மட்டும் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் 40 முறை அவுட்சைடு எட்ஜ் ஆனார். ஆனால் அடுத்த பந்தை எதிர்கொள்ளும் வரை உறுதியாக இருந்தார். விராட் கோலி பந்திற்கு பந்து, ரன்னிற்கு ரன், செசனுக்கு செசன் என விளையாடினார்.

விராட் கோலி ரன்கள் அடிக்க வேண்டும், வெற்றி பெற வேண்டும் என்ற தீராத பசியில் உள்ளார். யாராவது ஒருவர் இந்த எண்ணத்தோடு செல்லும்போது, அவரால் ஆசை நிறைவேற எது வேண்டுமென்றாலும் செய்ய முடியும்’’ என்றார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஐந்து மாதக் குழந்தையுடன் வந்த நாடாளுமன்ற உறுப்பினர் வெளியேற்றம்

Mohamed Dilsad

IMF Chief will not make Sri Lanka visit in March

Mohamed Dilsad

சுகாதார அமைச்சின் இரு பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளன

Mohamed Dilsad

Leave a Comment