Trending News

தொடரூந்து சேவை பாதிப்பு

(UTV|COLOMBO)-தொடரூந்து நிலைய அதிபர்கள் மற்றும் பணியாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் திடீர் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

இதன் காரணமாக ரம்புக்கனைக்கு அப்பால் மலையகத்துக்கான தொடரூந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கொழும்புக்கும் பதுளைக்குமான தொடரூந்து சேவையும், கண்டி – மாத்தளை வரையான தொடரூந்து சேவையும் முழுமையாக தடைப்பட்டுள்ளதாக, தொடரூந்து கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு நேர அஞ்சல் தொடரூந்தும், கொழும்பு – கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இரவு நேர அஞ்சல் தொடரூந்தும், நாவலபிட்டி தொடரூந்து நிலையத்துக்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் ரம்புக்கனை தொடரூந்து நிலையம் இன்று அதிகாலை முதல் மூடப்பட்டுள்ளதால், பயணிகள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

வடகொட தொடரூந்து நிலையத்தின் பணியாளர் ஒருவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கையை முன்னிறுத்தி இந்த திடீர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Provincial Council Elections cannot be held under previous election system

Mohamed Dilsad

அலுகோசு பதவிக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வது இன்றுடன் நிறைவு

Mohamed Dilsad

பல பிரதேசங்களில் மழையுடனான காலநிலை…

Mohamed Dilsad

Leave a Comment