Trending News

தடைசெய்யப்பட்டுள்ள பொலித்தீன் தயாரிப்புகள்-தகவல் வழங்க தொலைபேசி இலக்கம்

(UTV|COLOMBO)தடைசெய்யப்பட்டுள்ள பொலித்தீன் தயாரிப்புகள் மற்றும் அதனைப் பயன்படுத்துபவர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குவதற்காக, மத்திய சுற்றாடல் அதிகாரசபை தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகம் செய்துள்ளது.

0718 188 654 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு முறைப்பாடுகளை முன்வைக்கலாம் என மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் விசாரணைப்பிரிவு பணிப்பாளர் தெரிவித்துள்ளார்

பொலிஸார் மற்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபையினர் இணைந்து இது தொடர்பிலான சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் தடைசெய்யப்பட்ட பொலித்தீன் பாவனை தொடர்பில் 9000 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் விசாரணைப்பிரிவு பணிப்பாளர் என்.எஸ். கமகே தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

 

 

 

 

Related posts

Sri Lankan Army captain and a trooper killed in IED attack in Mali

Mohamed Dilsad

Official Local Government Election polling cards to be handed to post today

Mohamed Dilsad

Fire Erupts In A Three-Storied Building In Wennapuwa

Mohamed Dilsad

Leave a Comment