Trending News

பாகிஸ்தான் சென்றுள்ள மலாலா

(UTV|COLOMBO)-அமைதிக்கான நோபல் பரிசில் வழங்கப்பட்ட மலாலா யூசாப்சாய், 2012ம் ஆண்டின் பின்னர் முதன்முறையாக பாகிஸ்தான் சென்றுள்ளார்.

2012ம் ஆண்டு பெண்களின் கல்விக்காக போராட்டம் நடத்தியபோது, தலிபானிய தீவிரவாதிகளால் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இதையடுத்து அவர் இங்கிலாந்துக்கு சென்று சிகிச்சைகளின் பின்னர், பெண்களுக்கான கல்வி செயற்பாடுகளில் ஈடுபட்டார்.

இதனை மையப்படுத்தி அவருக்கு அமைதிக்கான நோபல்பரிசு வழங்கப்பட்டது.

தற்போது மீண்டும் பாகிஸ்தான் செல்லும் அவர், பாகிஸ்தானின் பிரதமர் சாஹிட் ககான் உள்ளிட்டவர்களை சந்திக்கவுள்ளார்.

எனினும், இந்தப் பயணம் குறித்த தகவல்கள் வெகு இரகசியமாக பேணப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

 

 

 

 

 

Related posts

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு

Mohamed Dilsad

தொலை தொடர்பு கோபுரத்தில் திடீரென தீ

Mohamed Dilsad

மிலேனியம் சவால் ஒப்பந்தம் – மீளாய்வு செய்ய 4 பேர் கொண்ட குழு

Mohamed Dilsad

Leave a Comment