Trending News

சாதாரண தர பரீட்சை – விடைத்தாள் திருத்தும் திகதி அறிவிப்பு

(UTV|COLOMBO)-இன்றுடன் நிறைவடைந்த கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் முதற்கட்ட பணி இம்மாதம் 23 ஆம் திகதி தொடக்கம் ஜனவரி மாதம் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதேவேளை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் இரண்டாம் கட்டப் பணி ஜனவரி மாதம் 8ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை நடைபெறும் என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார்.

விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் தலைமை அதிகாரிகளுக்கான தெளிவுபடுத்தும் நிகழ்வு எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை நடைபெறும்.

இதேவேளை 5 பரீட்சை முறைகேடுகள் சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாகவும் இவை தொடர்பில் பரீட்சைத் திணைக்களமும் பொலிஸாரும் தனித்தனியே விசாரணைகளை நடத்தவிருப்பதாகவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

Related posts

பாராளுமன்றம் ஒத்திவைப்பு

Mohamed Dilsad

Prison vehicle collided with a van at Mahawa

Mohamed Dilsad

Venezuela clashes as aid is blocked

Mohamed Dilsad

Leave a Comment